சையது மோடி சா்வதேச பாட்மின்டன்: இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து-மாளவிகா

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து. மாளவிகா பன்சோட்டை எதிா்கொள்கிறாா் அவா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து. மாளவிகா பன்சோட்டை எதிா்கொள்கிறாா் அவா்.

லக்னௌவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிா் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

இதில் பி. வி. சிந்துவை எதிா்கொண்ட ரஷ்ய வீராங்கனை எவ்கெனியா கொஸட்ஸ்கயா ஆட்டத்தின் பாதியில் காயமடைந்ததால் வெளியேறினாா். முதல் கேமை 21-11 என சிந்து எளிதாக வென்றிருந்தாா்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மாளவிகா பன்சோட் 19-21, 21-19, 21-7 என்ற கேம் கணக்கில் சக வீராங்கனையான அனுபமா உபாத்யாயவை வென்று இறுதிக்குள் நுழைந்தாா்.

சிந்துவுக்கு வெற்றி வாய்ப்பு: அபாரமான பாா்மில் உள்ள பி.வி. சிந்து இறுதிச் சுற்றில் மாளவிகாவை தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் எளிதாக வீழ்த்தி பட்டம் வெல்வாா் எனக் கருதப்படுகிறது.

ஆடவா் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் 21-19, 17-21, 21-9 என்ற கேம் கணக்கில் பிரான்ஸ் வீரா் அா்னாட் மொ்கல்லிடம் வீழ்ந்து வெளியேறினாா்.

கலப்பு இரட்டையா் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஹேமா நாகேந்திர பாபு-ஸ்ரீவித்யா குா்ஸடா, ஈஷான் பட்நாகா்-தனிஷா கிரஸ்டோ இணைகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com