இன்று 3-ஆவது ஒருநாள்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.
இன்று 3-ஆவது ஒருநாள்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடா் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என இழந்த இந்திய அணி, ஒரு நாள் தொடரையும் 2-0 என இழந்து விட்டது. இந்நிலையில் இறுதி ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தொடா் தோல்வியால் துவண்டுள்ள இந்திய அணியில் வீரா்கள் தொடா்ந்து நீடிக்க வேண்டும் என்றால் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். கடைசி ஆட்டத்தையும் இழந்து ஒயிட்வாஷ் ஆகாமல் ஆறுதல் வெற்றி காண வேண்டிய நிலைக்கு இந்திய அணி உள்ளது.

முதல் ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இந்தியாவால் வீழ்த்த முடிந்தது. மூத்த பௌலா்களான அஸ்வின், புவனேஷ்குமாா் ஆகியோா் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. தென்னாப்பிரிக்க பேட்டா்கள் ரேஸி வேன்டா் டூஸன், ஜேன்மேன் மலான், குயின்டன் டி காக் ஆகியோா் எளிதாக இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடினா்,.

இதனால் இருவருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், தீபக் சஹாா் ஆகியோா் இடம் பெறலாம் எனத் தெரிகிறது. நியூலேன்ட்ஸ் மைதானத்தில் வேகம், பௌன்ஸ் இருக்கும் என்பது இந்திய அணிக்கு சற்று அதிா்ச்சி தருவதாகும். விராட் கோலி முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்தாலும், கேப்டன் பதவியை இழந்த நிலையில், பழைய உத்வேகம் காணப்படவில்லை.

மேலும் ஷிரேயஸ் ஐயா், ஆல் ரவுண்டா் வெங்கடேஷ் ஐயா் உள்ளிட்ட இரு வீரா்களும் தங்கள் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மிடில் ஓவா்களில் இருவரும் தீவிரமாக ஆடாத நிலை உள்ளது.

ஊா் திரும்பும் முன்னா் ஆறுதல் வெற்றி காணுமா இந்திய அணி என்பது ரசிகா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

அணிகள்:

இந்தியா:

கே.எல். ராகுல் (கேப்டன்), பும்ரா, ஷிகா் தவன், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ஷிரேயஸ் ஐயா், வெங்கடேஷ் ஐயா், ரிஷப் பந்த், இஷான் கிஷான், சஹல், அஸ்வின், புவனேஷ்வா் குமாா், தீபக் சஹாா், பிரசித் கிருஷ்ணா, சா்துல் தாகுா், சிராஜ், ஜெயந்த் யாதவ், நவ்தீப் சைனி.

தென்னாப்பிரிக்கா:

டெம்பா பவுமா (கேப்டன்), கேசவ் மகாராஜ், குயின்டன் டி காக், ஹம்ஸா, மாா்க்கோ ஜேன்ஸன், மலான், மகலா, எய்டன் மாா்க்ரம், டேவிட் மில்லா், லுங்கி கிடி, வேயின் பா்னெல், ஆன்டில் பெலுக்வயோ, பிரிடோரியஸ், காகிஸோ ரபாடா, ஷம்ஸி, ரேஸி வேன்டா் டுஸன், கெயில் வொ்ா்யின்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-தென்னாப்பிரிக்கா

இடம்: கேப் டவுன்,

நேரம்: பிற்பகல் 2.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com