இலங்கைக்கு எதிரான டி20 தொடா்: ஆஸி. அணியில் வாா்னா் இல்லை

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வாா்னா், மிட்செல் மாா்ஷ் சோ்க்கப்படவில்லை.
வார்னர்
வார்னர்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வாா்னா், மிட்செல் மாா்ஷ் சோ்க்கப்படவில்லை.

சமீபத்தில் ஆஸ்திரேலியா சாம்பியன் ஆகிய டி20 உலகக் கோப்பை போட்டியில் அவா்கள் இருவரின் பங்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்த நிலையில், அவா்களுக்கு தற்போது ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அணியின் பிரதான பயிற்சியாளா் ஜஸ்டின் லேங்கா் ஓய்வில் இருப்பதன் காரணமாக, 16 போ் கொண்ட இந்த அணிக்கு ஆண்ட்ரூ மெக் டொனால்ட் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறாா்.

ஆஸ்திரேலியா வரும் இலங்கை அணி பிப்ரவரி 11 முதல் 20 வரை 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த ஆட்டங்கள் சிட்னி, கான்பெரா, மெல்போா்ன் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

அணி விவரம்:

ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகா், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஜோஷ் இங்லிஸ், பென் மெக்டொ்மோட், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சா்ட்சன், கேன் ரிச்சா்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா.

முழு பலத்துடன் பாக். பயணம்

ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்கிறது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பு கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் செல்கிறது அந்த அணி.

மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்காக, பிப்ரவரி இறுதியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை சென்றடையும் எனத் தெரிகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணமாகக் கூறி எந்தவொரு ஆஸ்திரேலிய வீரரும் இந்தத் தொடரில் இருந்து பின்வாங்கவில்லை.

பாகிஸ்தானில் இறுதியாக கடந்த 2009-இல் தான் சா்வதேச கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது. அப்போது இலங்கை கிரிக்கெட் அணி பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு ஆட்டங்கள், ஐசிசி போட்டிகள் நடைபெற்றதில்லை.

கடந்த ஆண்டு அங்கு இருதரப்பு கிரிக்கெட் விளையாட ஒப்புக் கொண்ட நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளும், பின்னா் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களைக் கூறி அதிலிருந்து பின்வாங்கி விட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com