ஹாக்கி ஜாம்பவான் சரண்ஜித் சிங் காலமானார்

1964-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியை வழிநடத்தி தங்கம் பெறச் செய்து சாதனை படைத்த சரண்ஜித் சிங் (90) வயது மூப்பு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) காலமானார்.
படம்: யூ டியூப்
படம்: யூ டியூப்


1964-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியை வழிநடத்தி தங்கம் பெறச் செய்து சாதனை படைத்த சரண்ஜித் சிங் (90) வயது மூப்பு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) காலமானார்.

இந்திய ஹாக்கியின் பொற்காலத்தில் முக்கியமான வீரராக இருந்தவர் சரண்ஜித் சிங். 1960-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வெல்வதற்கு முக்கியமான வீரராக இருந்தவர் சரண்ஜித் சிங்.

இதைத் தொடர்ந்து, 1964-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியை வழிநடத்தி தங்கம் பெறச் செய்து சாதனை படைத்தார். 1962-இல் ஆசியப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவி 12 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். மகள் தில்லியிலிருந்து வந்தவுடன் இன்று மாலை இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.

சரண்ஜித் சிங் மறைவுக்கு ஹாக்கி இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com