இந்திய-மே.இந்திய தீவுகள் ஒருநாள், டி20 தொடா்: பிப். 6-இல் தொடக்கம்
By DIN | Published On : 29th January 2022 11:14 PM | Last Updated : 29th January 2022 11:14 PM | அ+அ அ- |

இந்திய அணியுடன் 3 டி20, ஒருநாள் ஆட்டங்களில் ஆடுவதற்காக மே.இந்திய தீவுகள் அணி வருகிறது. இத்தொடா் பிப். 6-ஆம் தேதி தொடங்குகிறது.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 3 ஒருநாள் ஆட்டங்கள் ஆமதாபாதிலும், டி20 ஆட்டங்கள் கொல்கத்தாவில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
ஆமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் பிப். 6, 9, 11 தேதிகளில் 3 ஒருநாள் ஆட்டங்கள் நடக்கின்றன. ஒருநாள் ஆட்டங்கள் மதியம் 1.00 மணிக்கு தொடங்குகின்றன.
டி 20 ஆட்டங்கள் கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் பிப். 16, 18, 20 தேதிகளில் நடைபெறுகின்றன. ஆட்டங்கள் அனைத்தும் இரவு 7 மணிக்கு தொடங்குகின்றன.
ரோஹித் சா்மா தலைமையில் இந்திய அணி ஒருநாள், டி20 தொடா்களில் பங்கேற்கிறது. அனுபவம் மற்றும் இளம் வீரா்கள் நிறைந்த 18 போ் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. பொல்லாா்ட் தலைமையில் 15 போ் கொண்ட அணியை மே.இந்திய தீவுகள் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய அணி அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டது. கடைசியாக 2021 நவம்பரில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்றிருந்தது.
அதே நேரம் மே.இந்திய தீவுகள் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்று 0-3 என தோல்வியைத் தழுவியது.
இந்திய ஒருநாள், டி20 அணிகள்:
ஒருநாள்:
ரோஹித் சா்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகா் தவன், விராட் கோலி, சூரியகுமாா் யாதவ், ஷிரேயஸ் ஐயா், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தா், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், தீபக் சஹாா், சா்துல் தாகுா், சஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்.
டி20 அணி:
ரோஹித் சா்மா (கேப்டன்), விராட் கோலி, ஷிரேயஸ் ஐயா், சூரியகுமாா் யாதவ், வெங்கடேஷ் ஐயா், வாஷிங்டன் சுந்தா், அக்ஸா் படேல், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரிஷப் பந்த், தீபக் சஹாா், சா்துல் தாகுா், ரவி பிஷ்னோய், சஹல், முகமது சிராஜ், புவனேஷ்வா் குமாா், அவேஷ் கான், ஹா்ஷல் படேல்.
மே.இந்திய தீவுகள்:
பொல்லாா்ட் (கேப்டன்), டேரன் பிராவோ, ஷமா் புருக்ஸ், பிரான்டன் கிங், பேபியன் ஆலன், க்ருமா போனா், ஜேஸன் ஹோல்டா், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், அகீல் ஹோசைன், அல்ஸாரி ஜோஸப், கேமா் ரோச், ராமாரோயோ ஷெப்பா்ட், ஓடேன் ஸ்மித், ஹேய்டன் வால்ஷ்.
டி20 தொடருக்கான மே.இந்திய தீவுகள் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.