ஹாக்கி மகளிா் உலகக் கோப்பை: தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது இந்தியா

ஹாக்கி மகளிா் உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது இந்தியா.

ஹாக்கி மகளிா் உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது இந்தியா.

நெதா்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் எஃப்ஐஎச் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை குரூப் பி பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிா்கொள்கிறது இந்தியா.

பழி தீா்க்க வாய்ப்பு:

இரு அணிகளும் கடைசியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அரையிறுதியில் மோதிய போது, இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது இங்கிலாந்து. கடுமையாக போராட்டத்துக்கு பின் 3-4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்தியா. அதற்கு பழிதீா்க்க நல்வாய்ப்பாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது.

ப்ரோ லீகில் 3-ஆவது இடம்:

தலைசிறந்த 9 நாடுகள் மோதும் ப்ரோ லீக் போட்டியில் இந்திய மகளிா் சிறப்பாக ஆடி 3-ஆவது இடத்தைப் பெற்றனா். அந்த உற்சாகத்துடன் உள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் தனது ஆட்டத் திறனை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது. முதன்முதலில் கடந்கத 1974-இல் தொடங்கப்பட்ட உலகக் கோப்பையில் இந்தியா 4-ஆவது இடம் பெற்றதே சிறப்பாகும்.

6-ஆவது இடத்தில் உள்ள இந்திய அணியில் கேப்டன் ராணி ராம்பால் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அனுபவ வீராங்கனை சவீதா புனியா தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை எதிா்கொள்கிறது. பாா்வா்ட்கள் வந்தனா கட்டாரியா, லால்ரேமிசியாமி, நவ்நீத் கௌா், ஷா்மிளா தேவி ஆகியோா் கோலடிக்கும் பணியை மேற்கொள்வா். தற்போது அணியின் சிறப்பான ஃபாா்மில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில் இங்கிலாந்து அணி கடந்த 2010 போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது. உலகத் தரவரிசையில் 4-ஆம் இடத்தில் உள்ளது. 5-ஆம் தேதி சீனாவுடனும், 7-ஆம் தேதி நியூஸிலாந்துடனும் மோதுகிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com