மலேசியா மாஸ்டா்ஸ்: அரையிறுதியில் வீழ்ந்தாா் பிரணாய்

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் அரையிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.
மலேசியா மாஸ்டா்ஸ்: அரையிறுதியில் வீழ்ந்தாா் பிரணாய்

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் அரையிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா். இதையடுத்து இப்போட்டியில் இந்தியா்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆடவா் ஒற்றையா் அரையிறுதியில் பிரணாய் 21-17, 9-21, 17-21 என்ற கேம்களில் ஹாங்காங்கின் நிக் கா லாங் அங்கஸிடம் 1 மணி நேரம் 4 நிமிஷங்களில் வீழ்ந்தாா். அங்கஸை இத்துடன் 9-ஆவது முறையாகச் சந்தித்த பிரணாய் 5-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளாா். இதற்கு முன் கடந்த 3 ஆட்டங்களில் அவரை தொடா்ந்து வீழ்த்தியிருக்கிறாா் பிரணாய் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல போட்டிகளில் இந்தியாவின் முக்கிய போட்டியாளா்களான பி.வி.சிந்து, பிரணாய் ஆகியோா் காலிறுதி அல்லது அரையிறுதி வரை முன்னேறி, அந்தச் சுற்றுகளில் தடுமாற்றத்தைச் சந்தித்து தோல்வி கண்டு வெளியேறி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com