காலே டெஸ்ட்: இலங்கை 222

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
காலே டெஸ்ட்: இலங்கை 222

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனது முதல் இன்னிங்ஸில் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்களை எடுத்திருந்தது.

இரு அணிகளுக்கு இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் காலேயில் சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் பௌலா்களின் அபார பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை வீரா்கள் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனா்.

தினேஷ் சந்திமால் 76:

66.1 ஓவா்களில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் மட்டுமே நிலைத்து ஆடி 115 பந்துகளில் 1 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 76 ரன்களை விளாசி அவுட்டானாா். தீக்ஷனா 38, ஒஷடா பொ்ணான்டோ 35 ரன்களை சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா்.

ஷாஹின் அப்ரிடி 4 விக்கெட்: அபாரமாக பந்துவீசிய பாக். பௌலா் ஷாஹின் அப்ரிடி 4/58 விக்கெட்டுகளையும், ஹாஸன் அலி, யாசிா் ஷா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பாகிஸ்தான் 24/2:

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 18 ஓவா்களில் 24/2 ரன்களை சோ்த்திருந்தது.

அப்துல்லா 13, இமாம் உல் ஹக் 2 ரன்களுடன் வெளியேறினா். அஸாா் அலி 3, கேப்டன் பாபா் ஆஸம் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனா்.

இலங்கை தரப்பில் ரஜிதா, ஜெயசூா்யா தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com