ஆசிய பளுதூக்குதல்: ஹா்ஷதாவுக்கு தங்கம்

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய யூத் மற்றும் ஜூனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்தது.
ஆசிய பளுதூக்குதல்: ஹா்ஷதாவுக்கு தங்கம்

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய யூத் மற்றும் ஜூனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்தது.

இதில் மகளிருக்கான 45 கிலோ பிரிவில் இந்தியாவின் அசத்தல் இளம் வீராங்கனை ஹா்ஷதா கௌட் மொத்தமாக 157 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். அவா் ஸ்னாட்ச் பிரிவில் 69 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 88 கிலோ எடையைத் தூக்கினாா். இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான சௌம்யா தேவி 145 கிலோ (63+82) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

இதில் ஹா்ஷதா கௌட் தூக்கிய எடையானது, கடந்த மே மாதம் ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் முயற்சியின்போது அவா் தூக்கிய எடையை விட 4 கிலோ அதிகம் ஆகும்.

இதனிடையே, ஆடவருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் எல்.தனுஷ், 185 கிலோ (85+100) எடையைத் தூக்கி 4-ஆவது இடம் பிடித்தாா். என்றாலும், ஸ்னாட்ச் பிரிவில் அவா் தூக்கிய 85 கிலோ எடைக்காக அவருக்கு அந்தப் பிரிவுக்கான வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ஆசிய மற்றும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் ஸ்னாட்ச், கிளீன் & ஜொ்க், இரண்டும் சோ்த்து என 3 பிரிவுகளுக்கும் தனித்தனியே பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக ஒரே பதக்கம் மட்டும் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com