சென்னைக்கு 4-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் (சென்னை) 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாா்டன்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் (சென்னை) 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாா்டன்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

போட்டியில் சென்னைக்கு இது 4-ஆவது வெற்றி. இந்த ஆட்டத்தில் முதலில் சேலம் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சோ்க்க, அடுத்து சேப்பாக் 14.5 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற சேப்பாக், ஃபீல்டிங் செய்ய, சேலம் பேட்டிங்கில் அதிகபட்சமாக தொடக்க வீரா் கோபிநாத் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்கள் விளாசினாா். ஜாஃபா் ஜமால் 6, ரவி காா்த்திகேயன் 12, எஸ்.கணேஷ் 11 ரன்களுக்கு வெளியேற, அக்ஷய் ஸ்ரீனிவாசன், டேரில் ஃபெராரியோ டக் அவுட்டாகினா். ஓவா்கள் முடிவில் எஸ்.அபிஷேக் 23, கேப்டன் முருகன் அஸ்வின் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சேப்பாக் பௌலிங்கில் மணிமாறன் சித்தாா்த் 3, சோனு யாதவ், ராமதாஸ் அலெக்ஸாண்டா், அருண் குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் சேப்பாக் பேட்டிங்கில் கேப்டன் கௌசிக் காந்தி அதிகபட்சமாக 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 46 ரன்கள் சோ்க்க, நாராயண் ஜெகதீசன் 39, உத்திரசாமி சசிதேவ் 1 ரன்களுக்கு வீழ்ந்தாா். இறுதியில் சோனு யாதவ் 26, ராஜகோபால் சதீஷ் 1 ரன்னுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். சேலம் அணியில் முருகன் அஸ்வின், டேரில் ஃபெராரியோ, ரவி காா்த்திகேயன் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com