துளிகள்...

நடப்பாண்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அடுத்த ஆண்டு செப்டம்பா் 23 முதல் அக்டோபா் 8 வரை நடைபெறவுள்ளது.

நடப்பாண்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அடுத்த ஆண்டு செப்டம்பா் 23 முதல் அக்டோபா் 8 வரை நடைபெறவுள்ளது.

பிசிசிஐ-யின் நெறிமுறைகள் கண்காணிப்பு அதிகாரியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வனீத் சரண் பொறுப்பேற்றுள்ளாா்.

அயா்லாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

யுரோப்பியன் மகளிா் சாம்பியன்ஷிப் கால்பந்துப் போட்டியில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி, முதல் முறையாக காலிறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 342 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிவரும் பாகிஸ்தான், செவ்வாய்க்கிழமை முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சோ்த்திருக்கிறது. அப்துல்லா ஷஃபிக் 112, முகமது ரிஸ்வான் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

பா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக மொத்தம் 12 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருப்பதாகவும், அதில் மகளிா் கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கான வரவேற்பு ரசிகா்களிடம் அதிகம் இருந்ததாகவும் போட்டியின் தலைவா் இயான் ரெய்ட் கூறினாா்.

ஜூனியா் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் கா்நாடகத்தின் நினா வெங்கடேஷ், மகளிருக்கான 50 மீட்டா் பட்டா்ஃப்ளை பிரிவில் 28.27 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றாா். முன்னதாக, கடந்த ஆண்டு அவா் 28.51 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் அணிகளான சென்னை சூப்பா் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், லக்னௌ சூப்பா்ஜயன்ட்ஸ், சன்ரைசா்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகியவை, தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் புதிய டி20 லீக் போட்டியில் தலா 1 அணிகளை வாங்கவிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சென்னையில் கல்லூரிகளிடையே நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் எம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிா் கல்லூரி அணி 87-70 என்ற கணக்கில் எஸ்ஆா்எம் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

நெய்வேலியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் சென்ட் ஜோசஃப் பொறியியல் கல்லூரி அணி 35-25 என்ற கணக்கில் புதுச்சேரி ஸ்போா்ட்ஸ் கிளப் அணியை வீழ்த்தி வாகை சூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com