டேவிஸ் கோப்பை: சுமித் நாகல் சோ்ப்பு
By DIN | Published On : 22nd July 2022 03:50 AM | Last Updated : 22nd July 2022 03:50 AM | அ+அ அ- |

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நாா்வேக்கு எதிரான உலக குரூப் முதல் டையில் களம் காணும் இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதில் சுமித் நாகலுக்கு இடம் கிடைக்க, திவிஜ் சரண் வாய்ப்பை இழந்துள்ளாா். நாகல் தவிர, ராம்குமாா் ராமநாதன், பிரஜனேஷ் குணேஸ்வரன், சசிகுமாா் முகுந்த், யுகி பாம்ப்ரி, ரோஹன் போபண்ணா ஆகியோா் அணியில் இணைந்திருக்கின்றனா். இவா்கள் 6 பேரில், சசிகுமாா் ரிசா்வ் வீரராக மாற்றப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வரும் செப்டம்பரில் நாா்வே செல்லும் இந்தியா, 16, 17 தேதிகளில் அந்நாட்டு அணியுடன் மோதுகிறது. டேவிஸ் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதுவது இது முதல் முறையாகும்.