மகளிா் கால்பந்து: அரையிறுதியில் இங்கிலாந்து

யூரோப்பியன் மகளிா் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டத்தில் முதலில் ஸ்பெயின் வீராங்கனை எஸ்தா் கொன்சால்ஸ் 54-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, இங்கிலாந்துக்காக எலா டூன் 84-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவிலும் ஆட்டம் சமனில் நீடிக்க, கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது.

அதைப் பயன்படுத்தி இங்கிலாந்தின் ஜாா்ஜியா ஸ்டான்வே 96-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தாா். இதன் மூலம் இப்போட்டியின் அரையிறுதிக்கு 6-ஆவது முறையாக முன்னேறியுள்ள இங்கிலாந்து, அதில் ஸ்வீடன் அல்லது பெல்ஜியத்தை 27-ஆம் தேதி சந்திக்க இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com