உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: அமெரிக்கா முதலிடம்

அமெரிக்காவில் நடைபெற்று வந்த 18-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி திங்கள்கிழமையுடன் (இந்திய நேரப்படி) நிறைவடைந்தது. 
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: அமெரிக்கா முதலிடம்

அமெரிக்காவில் நடைபெற்று வந்த 18-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி திங்கள்கிழமையுடன் (இந்திய நேரப்படி) நிறைவடைந்தது. 

இம்மாதம் 15-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி, 10 நாள்கள் நடைபெற்று 24-ஆம் தேதியுடன் (அமெரிக்க நேரப்படி) முடிந்தது. சுமார் 180 நாடுகளைச் சேர்ந்த 1,700-க்கும் அதிகமான தடகள வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றிருந்தனர். போட்டியின் நிறைவில் அமெரிக்கா 33 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. தலா 10 பதக்கங்களுடன் எத்தியோபியா, நைஜீரியா முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. பட்டியலில் இந்தியா 1 பதக்கத்துடன் 37-ஆவது இடத்தில் உள்ளது. 

போட்டியை நடத்திய அமெரிக்கா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக 33 பதக்கங்கள் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com