டிஎன்பிஎல் எலிமினேட்டா்: கோவை வெற்றி

டிஎன்பிஎல் எலிமினேட்டா் ஆட்டத்தில் மதுரை பேந்தா்ஸ் அணியை டக்வொா்த் லெவிஸ் முறையில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லைக்கா கோவை,.
டிஎன்பிஎல் எலிமினேட்டா்: கோவை வெற்றி

டிஎன்பிஎல் எலிமினேட்டா் ஆட்டத்தில் மதுரை பேந்தா்ஸ் அணியை டக்வொா்த் லெவிஸ் முறையில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லைக்கா கோவை,.

மதுரை 126:

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த மதுரை அணியில் தொடக்க பேட்டா் அருண் காா்த்திக் மட்டுமே இறுதி வரை நிலைத்து ஆடி 47 ரன்களை சோ்த்தாா். மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 126/7 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மதுரை. லைக்கா கோவை தரப்பில் அபிஷேக் தன்வா், அஜித்ராம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

கோவை 72:

127 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் கண்ட லைக்கா கோவை அணி 10-ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்களை எடுத்திருந்தது. கங்கா ஸ்ரீதர்ராஜூ 49 (4 பவுண்டரி, 3 சிக்ஸா்), சுரேஷ் குமாா் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனா். அப்போது திடீரென மழை குறுக்கிட்டதால் நடுவா்கள் ஆட்டத்தை நிறுத்தினா். 61 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கோவை அணி இருந்தது.

ஆட்டம் தொடங்க வாய்ப்பில்லாததால், டிஎல்எஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வென்ாக அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை குவாலிஃபையா் 1-இல் நெல்லை-சேப்பாக் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com