தோல்வியிலிருந்து மீண்டு வருவோம்: மே.இ.தீவுகள் கேப்டன்

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம்  என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரான் தெரிவித்துள்ளார். 
தோல்வியிலிருந்து மீண்டு வருவோம்: மே.இ.தீவுகள் கேப்டன்

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம்  என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரான் தெரிவித்துள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்தி இருவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்தி அதிரடி காட்டினார். இதனால் இந்திய அணி 190 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 64 ரன்களும், தினேஷ் கார்த்தி 41 ரன்களும் சேர்த்தனர்.

இதனையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் வீர்ர்களை இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு கட்டுப்படுத்தியது. சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசினர். இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில், போட்டி முடிவடைந்த பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரான் கூறியதாவது: “ ஏமாற்றமாக உள்ளது. எங்கள் அணி வீரர்கள் மனதளவில் காயமடைந்துள்ளனர். 18 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின் இந்திய அணியின் வீரர்கள் எங்களிடம் இருந்து ஆட்டத்தினை அவர்கள் பக்கம் எடுத்துச் சென்றனர். நாங்கள் ஒரு அணியாக இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் இந்தத் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம்.” என்றார்.

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com