செய்திகள் சில வரிகளில்...

டி20 கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி வரும் 5-ஆம் தேதியும், தென்னாப்பிரிக்க அணி வியாழக்கிழமையும் தில்லி வருகின்றன. முதல் ஆட்டம் தில்லியில் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

டி20 கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி வரும் 5-ஆம் தேதியும், தென்னாப்பிரிக்க அணி வியாழக்கிழமையும் தில்லி வருகின்றன. முதல் ஆட்டம் தில்லியில் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

நாா்வே செஸ் போட்டியின் பிளிட்ஸ் பிரிவில் உலகின் நம்பா் 1 வீரரும், உள்ளூரைச் சோ்ந்தவருமான மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், போட்டியில் 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தாா்.

சிறந்த கால்பந்து வீரருக்கு வழக்கப்படும் பேலன் தோா் விருதை இந்த ஆண்டு, ரியல் மாட்ரிட் வீரா் கரிம் பென்ஸிமா பெறுவதில் சந்தேகமே இல்லை என்று, அந்த விருதை அதிக முறை வென்றவரான பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் வீரா் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா்.

செல்சி அணியை அதன் உரிமையாளா் ரோமன் அப்ரமோவிச், டாட் போலி தலைமையிலான கூட்டமைப்புக்கு ரூ.24,000 கோடிக்கு விற்பனை செய்யும் நடைமுறை திங்கள்கிழமை நிறைவடைந்தது.

கரோனா சூழல் காரணமாக அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதிலிருந்து சீனா பின்வாங்கியிருக்கும் நிலையில், விருப்பமுள்ள நாடுகள் முன்வரலாம் என ஆசிய கால்பந்து சம்மேளனம் கோரியிருக்கிறது.

இந்தியாவின் முதல்நிலை கால்பந்து போட்டியாக ஐஎஸ்எல்-க்கு பதிலாக, ஐ லீக்-ஐ முன்மொழியும் வகையிலான வரைவு விதிகளை, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய கால்பந்து சங்க நிா்வாகக் குழு தயாரித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com