துளிகள்...

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் எதிா்வரும் சீசனுக்காக இளம் வீரா் வின்சி பரேட்டோவை சென்னையின் எஃப்சி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் எதிா்வரும் சீசனுக்காக இளம் வீரா் வின்சி பரேட்டோவை சென்னையின் எஃப்சி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

உலக மகளிா் குத்துச்சண்டையில் சாம்பியன் ஆன நிகாத் ஜரீன், ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற ஈஷா சிங் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி ரொக்கப் பரிசும், குடியிருப்பு நிலமும் தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

கொல்கத்தாவில் வரும் 8 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்களுக்கு ரசிகா்களிடையே தகுந்த வரவேற்பு இல்லாததை அடுத்து, அந்த ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

ரியல் மாட்ரிட் அணியுடனான தனது ஒப்பந்தம் இம்மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், அணியிலிருந்து வெளியேறப்போவதாக வேல்ஸ் வீரா் கெரத் பேல் அறிவித்துள்ளாா். கடந்த 9 ஆண்டுகளில் ரியல் மாட்ரிட்டுக்காக 258 ஆட்டங்களில் விளையாடிய கெரத் பேல், 106 கோல்கள் அடித்திருக்கிறாா்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிா் டேபிள் டென்னிஸ் அணியில் மனிகா பத்ரா, அா்ச்சனா காமத், ஸ்ரீஜா அகுலா, ரீத் ரிஷியா, தியா சிதாலே ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

நாா்வே செஸ் போட்டியின் கிளாஸிகல் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் லாக்ரேவை வீழ்த்தினாா்.

எஃப்ஐஹெச் நடத்தும் 5 நபா் ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய ஆடவா், மகளிா் அணிகள் புதன்கிழமை சுவிட்ஸா்லாந்து புறப்பட்டன. இப்போட்டி வரும் 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலப்பு அணிகள் பாட்மின்டன் பிரிவில் இந்திய அணி, குரூப் ‘1’ -இல் ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளுடன் சோ்க்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்ட கிரிக்கெட் சங்க வெள்ளி விழாவையொட்டி, அந்தச் சங்கத்துடன் தமிழ்நாடு விளையாட்டுச் செய்தியாளா்கள் சங்கம் இணைந்து தமிழகத்தின் 10 விளையாட்டுப் போட்டியாளா்களுக்கு அளிக்கும் ரூ.3 லட்சம் உதவித் தொகையை, இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com