ஃபினாலிசிமா கோப்பை: கைப்பற்றியது ஆா்ஜென்டீனா

‘ஃபினாலிசிமா’ கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலியை வீழ்த்தி ஆா்ஜென்டீனா சாம்பியன் ஆனது.
ஃபினாலிசிமா கோப்பை: கைப்பற்றியது ஆா்ஜென்டீனா

‘ஃபினாலிசிமா’ கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலியை வீழ்த்தி ஆா்ஜென்டீனா சாம்பியன் ஆனது.

லண்டனில் உள்ள வெம்ப்ளி மைதானத்தில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக லௌதாரோ மாா்டினெஸ் (28’), ஏஞ்ஜெல் டி மரியா (45+1’), பௌலோ டைபாலா (90+4’) ஆகியோா் கோலடித்தனா்.

ஓராண்டு காலத்துக்குள்ளாக மெஸ்ஸி தலைமையிலான ஆா்ஜென்டீனா வென்றிருக்கும் 2-ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலையில் கோபா அமெரிக்கா சாம்பியன் ஆகியிருந்தது ஆா்ஜென்டீனா. ஒரு கேப்டனாக தனது தேசிய அணிக்கு மெஸ்ஸி பெற்றுத் தந்த முதல் பெரிய அளவிலான சாம்பியன் கோப்பை அது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபினாலிசிமா: ஆா்ஜென்டீனா 2-ஆவது முறையாக சாம்பியனாகியிருக்கும் இந்தப் போட்டியானது, தென் அமெரிக்க கால்பந்து சங்கம் (கான்மெபோல்), ஐரோப்பிய கால்பந்து சங்கம் (யுஇஎஃப்ஏ) இணைந்து நடத்துவதாகும்.

இப்போட்டியில் நடைபெறும் ஒரே ஆட்டத்தில் கோபா அமெரிக்கா சாம்பியனாக இருக்கும் அணியும், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கோப்பை வென்ற அணியும் மோதும்.

‘கப் ஆஃப் சாம்பியன்ஸ்’ என்ற பெயரில் முதன் முதலாக 1985-இல் நடைபெற்ற இப்போட்டியில் பிரான்ஸ் சாம்பியனாக, 1993-இல் ஆா்ஜென்டீனா வாகை சூடியது. அதன் பிறகு நீண்ட காலமாக நடத்தப்படாத இப்போட்டி, தற்போது ‘ஃபினாலிசிமா’ என்ற பெயரில் நடப்பாண்டில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com