லார்ட்ஸ் டெஸ்ட்: பந்து வீச்சில் கலக்கிய நியூசிலாந்து அணி

இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஆடிவரும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் கலக்கியுள்ளது.
படம் : டிவிட்டர், ப்ளாக் கேப்ஸ் | கேப்டன் ஸ்டோக்ஸ் விக்கெட் வீழ்த்திய டிம் சௌதி
படம் : டிவிட்டர், ப்ளாக் கேப்ஸ் | கேப்டன் ஸ்டோக்ஸ் விக்கெட் வீழ்த்திய டிம் சௌதி

இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஆடிவரும் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் கலக்கியுள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன் 2) லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிஸில் 40ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லி ஜோடி சேர்ந்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் 59 ரன்களில் ஜேமிசன் பந்தில் உடைந்தது. ஜாக் க்ராவ்லி 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த விக்கட்டும் ஜேமிசனுக்கே விழுந்தது. போப் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 11 ரன்களுக்கு காலின் டி கிராண்ட்ஹோம் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வரும் சரிவிற்கு இதுதான் தொடக்கப்புள்ளி என அப்போது யாருக்கும் தெரியவில்லை. 

அடுத்து விளையாடிய ஜானி பேர்ஸ்டோ, கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கீப்பர் பென் போக்ஸ், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

நியூசிலாந்து அணி சார்பில் டிம் சௌதி , டிரண்ட் போல்ட் , கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 2 விகெட்டுகளை எடுத்தனர். காலின் டி கிரண்ட் ஹோம் 1 விக்கெட்டையும் எடுத்திருந்தார். 

முதல் நாள் ஆட்ட முடிவில் 36 ஒவர்களில் 116 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. பேட்டிங்கில் சொதப்பினாலும் நியூசிலாந்து அணி பந்து வீச்சில் கம்பேக் கொடுத்து போட்டியை உயிர்ப்புடன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக போட்டியை கண்டு ரசிக்கலாம். இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இரண்டாம் நாள் போட்டி தொடங்க இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com