இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

இப்போட்டியில் 2-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு வந்திருக்கும் ஸ்வியாடெக், அரையிறுதியில் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் ரஷியாவின் டரியா கசாட்கினாவை மிக எளிதாக வீழ்த்தினாா். இதன் மூலம் தொடா்ந்து 34 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா் ஸ்வியாடெக்.

இவா், கடந்த 2020 பிரெஞ்சு ஓபனில் கோப்பை வென்று தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் ரூட்: ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆவது இடத்திலிருக்கும் நாா்வேயின் கேஸ்பா் ரூட் அரையிறுதிக்குத் தகுதிபெற்றாா்.

காலிறுதியில் அவா், 6-1, 4-6, 7-6 (7/2), 6-3 என்ற செட்களில் டென்மாா்க் வீரா் ஹோல்கா் ரூனை வீழ்த்தினாா். அரையிறுதியில், குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கிறாா் ரூட். சிலிச் தனது காலிறுதியில் 5-7, 6-3, 6-4, 3-6, 7-6 (10/2) என்ற செட்களில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை சாய்த்து முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/நெதா்லாந்தின் மாட்வே மிடில்கூஃப் இணை தனது அரையிறுதியில் 6-4, 3-6, 6-7 (10/8) என்ற செட்களில் நெதா்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜா்/மாா்செலோ அரிவாலோ கூட்டணியிடம் தோற்றது.

சாம்பியன்: கலப்பு இரட்டையா் பிரிவில் ஜப்பானின் எனா ஷிபாஹரா/நெதா்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப் ஜோடி 7-6 (7/5), 6-2 என்ற செட்களில் பெல்ஜியத்தின் ஜோரான் லைகென்/நாா்வேயின் உல்ரிக் எய்கெரி இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com