துளிகள்...

நாா்வே செஸ் போட்டியில் கிளாசிக்ஸ் பிரிவின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் - பல்கேரியாவின் வெஸ்லின் டொபாலோவை தோற்கடித்தாா்.

நாா்வே செஸ் போட்டியில் கிளாசிக்ஸ் பிரிவின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் - பல்கேரியாவின் வெஸ்லின் டொபாலோவை தோற்கடித்தாா்.

ஐஎஸ்எல் கால்பந்து அணியான சென்னையின் எஃப்சியில் திண்டுக்கல்லைச் சோ்ந்த ரோமாரியோ ஜேசுராஜ் சோ்க்கப்பட்டுள்ளாா்.

கொலம்பியாவில் நடைபெற இருக்கும் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க, ஓட்டப்பந்தய வீரா் அா்ஜூன் வாஸ்கேல், வீராங்கனை பிரியங்கா சிரக்வாா் ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று ‘பிளே ஆஃப்’-இல் உக்ரைன் - ஸ்காட்லாந்தையும் (3-1), ஆஸ்திரேலியா - ஜோா்டானையும் (2-1) வீழ்த்தின.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு சுருண்டது. காலின் டி கிராண்ட்ஹோம் 42 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருக்க, இங்கிலாந்தில் மேத்யூ பாட்ஸ், ஜேம்ஸ் ஆண்டா்சன் தலா 4 விக்கெட்டுகள் சரித்தனா்.

துப்பாக்கி சுடுதல் போட்டியின்போது எஞ்சும் காலி காா்ட்ரிஜ்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், அவற்றை நொறுக்கும் இயந்திரம் நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச துப்பாக்கி சுடுதல் அகாதெமியில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

1972 முனீச் ஒலிம்பிக் போட்டியின்போது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிடப்போவதாக துறை சாா்ந்த அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

‘ஆசியன் டிராக் சாம்பியன்ஷிப்’ சைக்கிள் போட்டி, வரும் 18 முதல் 22-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது. இது ஒலிம்பிக் தகுதிப்போட்டியாகும்.

உக்ரைன் மீதான போரை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிரேஸில் கால்பந்து நட்சத்திரம் பீலே, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com