மேயர்ஸ், புரூக்ஸ் சதம்: மே.இ. தீவுகள் 308 ரன்கள் குவிப்பு
By DIN | Published On : 04th June 2022 06:56 PM | Last Updated : 04th June 2022 06:56 PM | அ+அ அ- |

புரூக்ஸ் (படம்: ட்விட்டர் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்)
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
நெதர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு ஒருநாள் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், 2-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் நிகோலஸ் பூரன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையும் படிக்க | நியூசிலாந்து 285 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: இங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு
தொடக்க ஆட்டக்காரர் ஷை ஹோப் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2-வது விக்கெட்டுக்கு கைல் மேயர்ஸ் மற்றும் ஷமார் பூரூக்ஸ் சிறப்பான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இந்த இணை 184 ரன்கள் சேர்த்த நிலையில் சதமடித்த மேயர்ஸ் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கியவர்கள் சோபிக்கத் தவறினர்.
எனினும், புரூக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதமடித்து 101 ரன்கள் எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
நெதர்லாந்து தரப்பில் லோகன் வேன் பீக், விவியன் கிங்மா, ரியான் கிளெய்ன், பாஸ் டே லீட், ஆர்யன் தத் மற்றும் பீட்டர் சீலர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.