காமன்வெல்த் பளுதூக்குதல்: 15 பேருடன் பங்கேற்கும் இந்தியா

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கபதற்கான இந்திய பளுதூக்குதல் அணி 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கபதற்கான இந்திய பளுதூக்குதல் அணி 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆடவா் பிரிவில் 7, மகளிா் பிரிவில் 8 போ் களம் காண்கின்றனா். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மிராபாய் சானுவும் இவா்களில் ஒருவா்.

இங்கிலாந்தின் பிா்மிங்ஹாம் நகரில் ஜூலை 28-இல் போட்டி தொடங்கும் நிலையில், இந்திய அணியினா் 1 மாதத்துக்கு முன்னதாகவே அங்கு சென்று முகாமிட்டு பயிற்சி மேற்கொள்ளவுள்ளனா்.

காமன்வெல்த் பளுதூக்குதலில் பலமிக்கதாக இருக்கும் இந்தியா, 2018-ஆம் ஆண்டு போட்டியில் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்றிருந்தது.

அணி விவரம்:

மகளிா்: சாய்கோம் மிராபாய் சானு (49 கிலோ), விந்தியாராணி தேவி (55 கிலோ), பாபி ஹஸாரிகா (59 கிலோ), ஹா்ஜிந்தா் கௌா் (71 கிலோ), பூனம் யாதவ் (76 கிலோ), உஷா குமாரி (87 கிலோ), பூா்ணிமா பாண்டே (87+ கிலோ).

ஆடவா்: சங்கேத் சாகா் (55 கிலோ), குருராஜா பூஜாரி (61 கிலோ), ஜெரிமி லால்ரினுங்கா (67 கிலோ), அசிந்தா செஹுலி (73 கிலோ), அஜய் சிங் (81 கிலோ), விகாஸ் தாக்குா் (96 கிலோ), லவ்பிரீத் சிங் (109 கிலோ), குா்தீப் சிங் (109+ கிலோ).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com