இங்கிலாந்தைக் காப்பாற்றுவாரா ரூட்? வெற்றிக்கு 61 ரன்கள் தேவை

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இன்னும் 61 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது.
இங்கிலாந்தைக் காப்பாற்றுவாரா ரூட்? வெற்றிக்கு 61 ரன்கள் தேவை


நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இன்னும் 61 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 132 ரன்களும், இங்கிலாந்து 141 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 285 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கம் சரியாக அமையவில்லை. டாப் 4 பேட்டர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு திரும்ப இங்கிலாந்து 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன்பிறகு, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.

இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டோக்ஸ் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, பென் ஃபோக்ஸ் ஒத்துழைப்பு தர, ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதத்தைக் கடந்த ரூட் பவுண்டரி அடித்ததோடு மட்டும் இல்லாமல், ஓடியும் ரன்களை எடுத்து நெருக்கடியை நியூசிலாந்து பக்கம் திருப்பினார்.

இந்த இணை 3-ம் நாள் ஆட்டநேர முடிவு வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. 6-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்ததில், ஃபோக்ஸ் எடுத்தது வெறும் 9 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. ரூட் 77 ரன்களுடனும், ஃபோக்ஸ் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 61 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. நியூசிலாந்து வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இதனால், 4-ம் நாள் ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எனினும், 4-ம் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கீடு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com