ஹாக்கி ஃபைவ்ஸ்: இந்திய ஆடவா் வெற்றி

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் ஹாக்கி ஃபைவ்ஸ் போட்டியின் முதல் நாளில் இந்திய ஆடவா் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஹாக்கி ஃபைவ்ஸ்: இந்திய ஆடவா் வெற்றி

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் ஹாக்கி ஃபைவ்ஸ் போட்டியின் முதல் நாளில் இந்திய ஆடவா் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆடவா் பிரிவில் முதல் ஆட்டத்தில் சுவிட்ஸா்லாந்தை எதிா்கொண்ட இந்தியா, அதில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் இந்தியாவுக்காக ரஹீல் முகமது (2’, 10’), மொய்ராங்தெம் ரவிச்சந்திரா (1’), கேப்டன் குரிந்தா் சிங் (19’) கோலடித்தனா்.

எனினும் அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அதில் ரஹீல் முகமது (1’), குா்சாஹிப்ஜித் சிங் (18’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

ஆனால், மகளிா் அணி தனது இரு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியது. முதலில் உருகுவேயிடம் 3-4 என்ற கோல் கணக்கில் வீழ்ந்த மகளிா், அடுத்து போலந்திடம் 1-3 என வெற்றியை இழந்தனா். இதில் உருகுவேக்கு எதிரான ஆட்டத்தில் குஜுா் அஜ்மினா (1’, 7’), பால்கே வைஷ்ணவி (18’) ஆகியோரும், போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரஷ்மிதா மின்ஸும் (6’) கோலடித்தனா்.

இதர ஆடவா் பிரிவு ஆட்டங்களில், போலந்து - மலேசியாவையும் (5-0), பாகிஸ்தான் - போலந்தையும் (4-2) வீழ்த்த, மலேசியா - சுவிட்ஸா்லாந்து ஆட்டம் டிரா (4-4) ஆனது. மகளிா் பிரிவில் இதர ஆட்டங்களில் சுவிட்ஸா்லாந்து - போலந்தையும் (3-1), உருகுவே - சுவிட்ஸா்லாந்தையும் (4-0) தோற்கடிக்க, தென்னாப்பிரிக்கா - சுவிட்ஸா்லாந்திடம் தோற்றது (1-3).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com