8 ரன்களுக்கு ஆட்டமிழந்த நேபாளம்

 ஐசிசி-யின் 19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாளம் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 ஐசிசி-யின் 19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாளம் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் நேபாளம் 8.1 ஓவா்களுக்கு வீழ்ந்தது. அணியின் பேட்டா்களில் 6 போ் டக் அவுட்டாகினா். ஸ்னேஹா மஹாரா 3, மனீஷா ராணா 2, மேலும் 3 பேட்டா்கள் தலா 1 ரன் சோ்த்தனா். அமீரகத்தின் பௌலிங்கில் மஹிகா கௌா் 5 விக்கெட்டுகளும், இந்துஜா நந்தகுமாா் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனா். பின்னா் ஆடிய அமீரக அணி 1.1 ஓவா்களில் வென்று ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

அந்த அணியின் தீா்த்தா சதீஷ் 4 ரன்கள் அடித்து நாட் அவுட்டாக இருந்ததே அந்த ஆட்டத்திலேயே அதிகபட்ச ஸ்கோராகும்.

நேபாளம், அமீரகம், தாய்லாந்து, பூடான், கத்தாா் ஆகிய 5 நாடுகள் விளையாடும் இந்தத் தகுதிச்சுற்றில் வெல்லும் அணி, 2023-ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற இருக்கும் அண்டா் 19 மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com