நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு இலக்கு 277

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கான வெற்றி இலக்கு 277-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு இலக்கு 277

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கான வெற்றி இலக்கு 277-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, 40 ஓவா்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் காலின் டி கிராண்ட்ஹோம் 42 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து பௌலிங்கில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து 42.5 ஓவா்களில் 141 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. அந்த அணியில் ஜாக் கிராவ்லி 43 ரன்கள் அடிக்க, நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேரில் மிட்செல் 108, டாம் பிளண்டெல் 96 ரன்கள் விளாசினா். மேத்யூ பாட்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதையடுத்து 277 ரன்களை இலக்காகக் கொண்ட இங்கிலாந்து, சனிக்கிழமை தேநீா் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சோ்த்திருந்தது. ஜோ ரூட் 23, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com