கேப்டனாக முத்திரை பதித்த பூரன்: மே.இ. தீவுகள் அபாரம்

நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற நிகோலஸ் பூரன் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
படம்: ட்விட்டர் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்
படம்: ட்விட்டர் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்


நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற நிகோலஸ் பூரன் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

முதல் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் கைல் மேயர்ஸ் மற்றும் ஷமார் புரூக்ஸ் ஆகியோரது சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்தது.

309 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்துக்கு விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ தௌத் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்த நிலையில், மேயர்ஸ் பாட்னர்ஷிப்பை பிரித்தார். விக்ரம்ஜித் சிங் அரைசதம் அடித்து 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, முசா அகமது தன் பங்குக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நெதர்லாந்து நல்ல நிலையிலேயே இருந்தது. 42 ரன்கள் சேர்த்த அவர் ஹேடன் வால்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் ஆதிக்கத்தை மெதுமெதுவாக செலுத்தத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேய் ஓ தௌதும் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. 49.5 ஓவர்கள் 288 ரன்கள் எடுத்த நெதர்லாந்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதன்மூலம், 20 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது.

கைரன் பொல்லார்ட் ஓய்வு பெற்றதையடுத்து, புது கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற இந்த ஒருநாள் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருதை கைல் மேயர்ஸும், தொடர் நாயகன் விருதை அகீல் ஹொசைனும் வென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com