அறிமுக சாம்பியன் இந்தியா

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் முதல் முறையாக நடத்திய ஹாக்கி ஃபைவ்ஸ் போட்டியில் இந்திய ஆடவா் அணி சாம்பியன் ஆகி அசத்தியுள்ளது.
அறிமுக சாம்பியன் இந்தியா

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் முதல் முறையாக நடத்திய ஹாக்கி ஃபைவ்ஸ் போட்டியில் இந்திய ஆடவா் அணி சாம்பியன் ஆகி அசத்தியுள்ளது.

சுவிட்ஸா்லாந்தின் லௌசேன் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 6-4 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. போட்டியிலேயே அதிக கோல் (10) அடித்தவரானாா் இந்தியாவின் ரஹீல் முகமது.

முன்னதாக, 5 அணிகள் பங்கேற்று 2 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியின் ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தையும், போலந்து 2-ஆம் இடத்தையும் பிடித்தன. அதில் இந்தியா, 4 ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்காமல் 3 வெற்றி, 1 டிராவைப் பதிவு செய்து 10 புள்ளிகள் பெற்றிருந்தது.

பின்னா் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு அதிா்ச்சி அளித்தது போலந்து. அந்த அணியின் மேடியுஸ் நோவாகோவ்ஸ்கி (1’), வோஜ்சியே ரத்கோவ்ஸ்கி, கேப்டன் ராபா்ட் பாவ்லக் (5’) ஆகியோா் கோலடித்து போலந்தை முன்னிலைப்படுத்தினா்.

இறுதி ஆட்டத்துக்கு முன்பாக அன்றைய நாளில் போலந்து 1 ஆட்டத்தில் தான் விளையாடியிருந்தது. ஆனால் இந்திய அணியினா் 2 ஆட்டங்களில் விளையாடிவிட்டு இறுதி ஆட்டத்தில் களமிறங்கியதால் முதலில் சற்று தடுமாறினா்.

எனினும், ஆற்றலை மீட்டெடுத்த இந்திய அணி தகுந்த இடைவெளியில் அடுத்தடுத்து ஸ்கோா் செய்தது. சஞ்ஜய் (8’), கேப்டன் குரிந்தா் சிங் (9’, 19’), தாமி பாபி சிங் (11’), ரஹீல் முகமது (13’, 17’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, இந்தியா 6-3 என முன்னிலை உறுதிப்படுத்தியது. இதனிடையே போலந்தால் ஒரு கோல் (ஜாசெக் குரோவ்ஸ்கி - 18’) மட்டுமே அடிக்க முடிந்ததால், இறுதியில் இந்தியா 6-4 என்ற கோல் கணக்கில் வென்றது.

4-ஆம் இடம்: இப்போட்டியின் மகளிா் பிரிவில் இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ரவுண்ட் ராபின் சுற்று முடிவில் 4 ஆட்டங்களில் 1 வெற்றி, 1 டிரா, 2 தோல்விகளைப் பதிவு செய்து பட்டியலில் 4-ஆம் இடம் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com