விரலில் காயம்: டி20 தொடரிலிருந்து விலகினார் ஆஸி. வீரர்
By DIN | Published On : 07th June 2022 05:00 PM | Last Updated : 07th June 2022 05:00 PM | அ+அ அ- |

ஆஸி. அணி (கோப்புப் படம்)
ஆஸ்திரேலிய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
டி20 தொடருக்கு மட்டும் தேர்வாகியிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சான் அபாட்டுக்குப் பயிற்சியின்போது விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டி20 தொடரிலிருந்து விலகி ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிச் செல்லவுள்ளார்.
30 வயது சான் அபாட், ஆஸ்திரேலிய அணிக்காக 5 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸி. அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் அவர் விளையாடினார்.
JUST IN: Sean Abbott’s tour of Sri Lanka is over before it started after breaking a finger in the nets@LouisDBCameron | #SLvAUS https://t.co/R6YtxT6mqR
— cricket.com.au (@cricketcomau) June 7, 2022