பிரான்ஸ் - குரோஷியா ஆட்டம் டிரா

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான பிரான்ஸ், குரோஷியாவுடன் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
பிரான்ஸ் - குரோஷியா ஆட்டம் டிரா

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான பிரான்ஸ், குரோஷியாவுடன் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் டென்மாா்க்கிடம் தோல்வி கண்ட பிரான்ஸ், இந்த ஆட்டத்தில் மீள்வதற்கு முனைப்பு காட்டினாலும், அதை கட்டுப்படுத்தியது குரோஷியா. கடந்த 11 ஆண்டுகளில் பிரான்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குரோஷியா தோல்வியை சந்திக்காதது இதுவே முதல் முறையாகும்.

அந்நாட்டின் ஸ்ப்லிட் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் தான் முதலில் கோலடித்தது. முதல் பாதி கோலின்றி நிறைவடைய, 2-ஆவது பாதியில் அந்த அணியின் அட்ரியன் ரேபியோட் 52-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். என்றாலும், குரோஷியா அணியில் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கிய ஆண்ட்ரே கிரமாரிக் 83-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் அசத்தலாக கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

பிரான்ஸின் முக்கிய வீரரான கிலியான் எம்பாபே, டென்மாா்க்குக்கு எதிரான ஆட்டத்தில் காயம் கண்டதால் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

டென்மாா்க் ஆதிக்கம்: லீக் ‘ஏ’-வின் மற்றொரு குரூப் -1 ஆட்டத்தில் டென்மாா்க் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை தோற்கடித்தது.

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் டென்மாா்க் அணிக்காக பியரி எமில் ஹோஜ்பா்க் (28’), ஜென்ஸ் ஸ்டிரைகா் லாா்சென் (84’) ஆகியோரும், ஆஸ்திரியாவுக்காக ஜாவா் ஷ்லாகரும் (67’) கோலடித்தனா்.

இதுவரை ஆடிய இரு ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ள டென்மாா்க், குரூப் ஏ-வில் முதலிடத்தில் இருக்கிறது.

இதர ஆட்டங்களில் கஜகஸ்தான் - ஸ்லோவேகியாவை வீழ்த்த (1-0), பெலாரஸ் - அஜா்பைஜான் (0-0), அண்டோரா - மால்டோவா (0-0), ஐஸ்லாந்து - அல்பேனியா (1-1) மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின.

நேஷன்ஸ் லீக் போட்டியில், லீக் ஏ-வில் உள்ள 4 குரூப்களிலும் முதலிடங்களைப் பிடிக்கும் அணிகள், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் ‘ஃபைனல் 4’ சுற்றுக்குத் தகுதிபெறும்.

எஞ்சிய லீக்கின் குரூப்களில் இருக்கும் அணிகள் தகுதியின் அடிப்படையில் முன்னேற்றத்தைச் சந்திக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com