புதிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்: இந்திய அணி அறிவிப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஹர்மன்பிரீத் கௌர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஹர்மன்பிரீத் கௌர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (புதன்கிழமை) அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இலங்கையில் ஜூன் 23-ம் தேதி தொடங்கவுள்ள டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்தது.

மிதாலி ராஜ் ஓய்வு முடிவை அறிவித்ததால், புதிய கேப்டன் பொறுப்புக்கு டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டி20 அணியை வழிநடத்தி வரும் ஹர்மன்பிரீத் கௌரிடமே ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடர் அணி: ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெஃபாலி வர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), எஸ் மேக்னா, தீப்தி சர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், சிம்ரன் பஹதூர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ராகர், மேக்னா சிங், ரேனுகா சிங், தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹல்ரீன் தியோல்.

டி20 தொடருக்கான அணி: ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெஃபாலி வர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), எஸ் மேக்னா, தீப்தி சர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், சிம்ரன் பஹதூர், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ராகர், மேக்னா சிங், ரேனுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜுலான் கோஸ்வாமி, ஸ்நே ராணா, ஜெமிமா ரோட்ர்கிஸ் ஆகியோர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com