இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பாளர்கள்: விராட் கோலிக்கு முதலிடம்
By DIN | Published On : 08th June 2022 06:24 PM | Last Updated : 08th June 2022 06:48 PM | அ+அ அ- |

இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பாளர்களைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையை விராட் கோலி அடைந்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி(33) உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இருப்பவர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியாக(200 மில்லியன்) உயர்ந்துள்ளது.
இதனால், இந்தியாவில் இன்ஸ்டாவில் அதிக பின் தொடர்பாளர்களைக் கொண்ட முதல் நபர் என்கிற புதிய சாதனையை விராட் கோலி அடைந்துள்ளார்.
உலக பட்டியலில் கால்பந்தாட்டத்தின் நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ(37) 45 கோடி பின் தொடர்பாளர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.