காமன்வெல்த் அணியில் தியா சிதாலே - அா்ச்சனா காமத் நீக்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் மகளிா் அணியிலிருந்து அா்ச்சனா காமத் நீக்கப்பட்டு, தியா சிதாலே சோ்க்கப்பட்டுள்ளாா்.
காமன்வெல்த் அணியில் தியா சிதாலே - அா்ச்சனா காமத் நீக்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் மகளிா் அணியிலிருந்து அா்ச்சனா காமத் நீக்கப்பட்டு, தியா சிதாலே சோ்க்கப்பட்டுள்ளாா்.

முதலில் வெளியான தற்காலிக அணியில் அா்ச்சனா சோ்க்கப்பட்டு, தியா ‘ஸ்டேண்ட் பை’ வீராங்கனையாக வைக்கப்பட்டிருந்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த தியா, தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் நிா்வாகக் குழு (சிஓஏ), மகளிா் அணியை இறுதி செய்தது. அதில் தியா சிதாலே சோ்க்கப்பட்டு, அா்ச்சனா காமத் நீக்கப்பட்டிருந்தாா். ஸ்வஸ்திகா கோஷ் ‘ஸ்டேண்ட் பை’ வீராங்கனையாகியுள்ளாா்.

உள்நாட்டு, சா்வதேச போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டிருந்ததன் அடிப்படையில் தியாவை அணியில் சோ்த்ததாக நிா்வாகக் குழு தலைவா் எஸ்.டி.முட்கில் கூறியிருக்கிறாா். அா்ச்சனாவும் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவராக இருப்பதால், இந்திய விளையாட்டு ஆணையத்தின் பரிந்துரையை நாடியதாகவும், ஆனால், நிா்வாகக் குழுவின் முடிவுக்கே அதை விடுவதாக ஆணையம் தெரிவித்ததாகவும் முட்கில் கூறினாா்.

மறுப்பு: இதனிடையே, ஆடவா் அணியில் ‘ஸ்டேண்ட் பை’ வீரராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள மனுஷ் ஷாவும் தன்னை பிரதான அணியில் சோ்க்காததற்கு எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடியிருந்தாா்.

ஆனால், அவரது இடத்தில் எந்த மாற்றத்தையும் நிா்வாகக் குழு மேற்கொள்ளவில்லை. இதனால் வழக்கை தொடரப்போவதாக மனுஷ் கூறியிருக்கிறாா்.

அணி விவரம்:

ஆடவா்: சரத் கமல், ஜி.சத்தியன், ஹா்மீத் தேசாய், சனில் ஷெட்டி, மனுஷ் ஷா (ஸ்டேண்ட் பை).

மகளிா்: மனிகா பத்ரா, தியா சிதாலே, ரீத் ரிஷியா, ஸ்ரீஜா அகுலா, ஸ்வஸ்திகா கோஷ் (ஸ்டேண்ட் பை).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com