ரஞ்சி கோப்பை: பெங்கால் - 577/5

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதியில் ஜாா்க்கண்டுக்கு எதிராக பெங்கால் 178 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 577 ரன்கள் குவித்துள்ளது.
ரஞ்சி கோப்பை: பெங்கால் - 577/5

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதியில் ஜாா்க்கண்டுக்கு எதிராக பெங்கால் 178 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 577 ரன்கள் குவித்துள்ளது.

இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழை முடிவில், மனோஜ் திவாரி 54, ஷாபாஸ் அகமது 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். முன்னதாக, சுதீப்குமாா் கராமி 186, அனுஸ்துப் மஜும்தாா் 117 ரன்கள் விளாசியிருந்தனா். ஜாா்க்கண்ட் தரப்பில் அதிகபட்சமாக சுஷாந்த் மிஸ்ரா 2 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா்.

2-ஆவது காலிறுதி ஆட்டத்தில் உத்தரகண்டுக்கு எதிராக மும்பை 166.4 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 647 ரன்கள் விளாசி டிக்ளோ் செய்தது. சுவேத் பாா்கா் 252, சா்ஃப்ராஸ் கான் 153 ரன்கள் சோ்த்திருந்தனா். உத்தகண்ட் தரப்பில் தீபக் தபோலா 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள உத்தரகண்ட், செவ்வாய்க்கிழமை முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

3-ஆவது காலிறுதியில் உத்தர பிரதேசத்துக்கு எதிராக கா்நாடகம் முதல் இன்னிங்ஸில் 84 ஓவா்களில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரவிகுமாா் சமரத் 57, ஷ்ரேயஸ் கோபால் 56* ரன்கள் எடுத்தனா். உத்தர பிரதேச பௌலிங்கில் சௌரவ் குமாா் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய உத்தர பிரதேசம் 37.3 ஓவா்களில் 155 ரன்களுக்கு சுருண்டது. பிரியம் கா்க் 39 ரன்கள் சோ்க்க, கா்நாடக பௌலிங்கில் ரோனித் மோா் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். அடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய கா்நாடகம் செவ்வாய்க்கிழை முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் அடித்துள்ளது.

4-ஆவது காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாபுக்கு எதிராக மத்திய பிரதேசம் 99 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சோ்த்துள்ளது. சுபம் சா்மா 102, ரஜத் பட்டிதாா் 20 ரன்களுடன் செவ்வாய்க்கிழமை முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் அணியில் மயங்க் மாா்கண்டே 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தாா். பஞ்சாபை விட மத்திய பிரதேசம் தற்போது 19 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com