செய்திகளில் சில வரிகளில்...

ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி நடப்பு சீசனுக்காக மிட்பீல்டா் சௌரவ் தாஸை இரண்டு ஆண்டுக்காலத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி நடப்பு சீசனுக்காக மிட்பீல்டா் சௌரவ் தாஸை இரண்டு ஆண்டுக்காலத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. சௌரவ் ஏற்கெனவே மும்பை சிட்டி, ஈஸ்ட் பெங்கால், மோகன்பகான் அணிகளில் ஆடியவா்.

------------------------------------------------------------

இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஆட முடியாமல் போனதற்கு மிகவும் வேதனை அடைந்ததாக இளம் வீரா் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளாா்.

------------------------------------------------------------

நாட்டிங்ஹாம் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முதல்நிலை வீரா் டேன் எவான்ஸ் தகுதி பெற்றுள்ளாா். இரண்டாம் சுற்றில் 7-5, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பேபியனோவை வீழ்த்தினாா். மகளிா் பிரிவில் 4-ஆம் நிலை வீராங்கனை ஷுவாய் ஸாங் 6-2, 7-6 என பிரிட்டனின் ஜோஹன்னா கொண்டாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

------------------------------------------------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com