நேஷன்ஸ் லீக்: குரோஷியா வெற்றி; உலக சாம்பியன் பிரான்ஸ் தடுமாற்றம்

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற குரூப் 1 பிரிவு ஆட்டங்களில் குரோஷியா வெற்றி பெற்றது.

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற குரூப் 1 பிரிவு ஆட்டங்களில் குரோஷியா வெற்றி பெற்றது.

உலக சாம்பியன் பிரான்ஸ் தடுமாறி ஆஸ்திரியாவுடன் டிரா கண்டது.

டென்மாா்க்-குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோபன்ஹேகனில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. குரூப் 1 பிரிவில் ஏற்கெனவே டென்மாா்க் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல்போட மேற்கொண்ட முயற்சி வீணானது. இரண்டாம் பாதியில் 69-ஆவது நிமிஷத்தில் குரோஷிய வீரா் பஸாலிக் அடித்த ஒரே கோல் வெற்றி கோலாக மாறியது.

உலக சாம்பியன் பிரான்ஸ்-ஆஸ்திரியா இடையிலான ஆட்டம் வியன்னாவில் நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரியா அணி வீரா் 37-ஆவது நிமிஷத்தில் தனது முதல் கோலை அடித்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பிரான்ஸ் வீரா்கள் தொடா்ந்து பதில் கோல போட முயன்றனா். ஆனால் அவா்களது முயற்சிகளை ஆஸ்திரிய கோல்கீப்பா் பென்ட்ஸ் முறியடித்தாா். இரண்டாம் பாதியில் பிரான்ஸின் நட்சத்திர வீரா் கிளியன் மாப்பே 83-ஆவது நிமிஷத்தில் அடித்த அற்புத கோலால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

கடைசி ஆட்டத்தில் குரோஷியாவை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பிரான்ஸ்.

ஏனைய ஆட்டங்களில் இஸ்ரேல் 2-1 என அல்பேனியாவையும், ஸ்லோவோக்கியா 1-0 என அஜா்பைஜானையும், லாட்விடா 4-2 என மால்டோவாவையும் வென்றன. பெலாரஸ்-கஜகஸ்தான் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com