650 டெஸ்ட் விக்கெட்டுகள்: ஆண்டர்சனின் அடுத்த சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 650 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
650 டெஸ்ட் விக்கெட்டுகள்: ஆண்டர்சனின் அடுத்த சாதனை


நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 650 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 553 ரன்களும், இங்கிலாந்து 539 ரன்களும் எடுத்தன. 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கமே மோசமாக இருந்தது.

முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி மட்டும் அடித்த கேப்டன் டாம் லாதமை போல்டாக்கினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் வீழ்த்தும் 650-வது விக்கெட் இது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வேகப்பந்துவீச்சாளரும் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இல்லை. இதன்மூலம், 650 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:

  • முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்டுகள்
  • ஷேன் வார்னே - 708 விக்கெட்டுகள்
  • ஜேம்ஸ் ஆண்டர்சன் - 650 விக்கெட்டுகள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com