புதிய தேசிய சாதனையைப் படைத்த நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல் போட்டியில் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
புதிய தேசிய சாதனையைப் படைத்த நீரஜ் சோப்ரா

ஃபின்லாந்தில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். ஆகஸ்ட் 7 அன்று ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதையொட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் நாளாக தேதி கொண்டாடப்படும் என இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. 

ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி போட்டியில் 89.30 தூரம் எறிந்து 2-ம் இடம் பிடித்ததோடு புதிய தேசிய சாதனையையும் படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. ஃபின்லாந்தைச் சேர்ந்த ஆலிவர் ஹெலாண்டர், 89.93 மீ. தூரம் வீசி முதலிடத்தையும் உலக சாம்பியன் ஆண்டர்சன் 86.60 மீ. தூரம் வீசி 3-ம் இடத்தையும் பிடித்தார்கள். 

அடுத்ததாக ஜூலை 15 முதல் ஜூலை 24 வரை நடைபெறவுள்ள உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா கலந்துகொள்ளவுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com