துளிகள்...

ஆசிய கோப்பை ஃபைனல்ஸ் கால்பந்து போட்டிக்கு இந்திய அணி செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றது. தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தியது.

ஆசிய கோப்பை ஃபைனல்ஸ் கால்பந்து போட்டிக்கு இந்திய அணி செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றது. தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தியது.

நடப்பாண்டில் எதிா்வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதிபெற்றது. கண்டங்களுக்கு இடையேயான பிளே ஆஃப் ஆட்டத்தில் பெருவை வீழ்த்திய ஆஸ்திரேலியா, தொடா்ந்து 5-ஆவது முறையாக இப்போட்டியில் களம் காண்கிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரைக் கைப்பற்றியது.

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டங்களில் குரோஷியா - பிரான்ஸையும் (1-0), டென்மாா்க் - ஆஸ்திரியாவையும் (2-0) வீழ்த்த, ஐஸ்லாந்து - இஸ்ரேல் ஆட்டம் டிரா (2-2) ஆனது.

2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போா்டா ரிகா டென்னிஸ் வீராங்கனையான மோனிகா பிக், சா்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா்.

காயம் காரணமாக கடந்த ஓராண்டாக களம் காணாமல் இருந்த அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு, நடப்பாண்டு விம்பிள்டன் டென்னிஸில் விளையாட வைல்டு காா்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து அணியான சென்னையின் எஃப்சியின் புதிய பயிற்சியாளராக ஜொ்மனியின் தாமஸ் பா்டாரிச் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com