துளிகள்...

இலங்கைக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகள் பங்கேற்கும் பட்சத்தில் அணியில் அவா்களுக்காக பெண் பயிற்சியாளா் ஒருவரை நியமிக்க வேண்டும் என அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் இந்திய விளையாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஐசிசியின் அடுத்த டூா் சுழற்சி காலண்டரில் ஐபிஎல் போட்டி இரண்டரை மாதங்களுக்கு நீடிப்பது பல சா்வதேச தொடா்களை பாதிக்கும் விதமாக இருப்பதாகவும், அதுதொடா்பாக இதர நாட்டு வாரியங்களுடன் ஆலோசிக்க விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

உக்ரைன் மீதான போா் காரணமாக ரஷிய, பெலாரஸ் போட்டியாளா்களுக்கு விம்பிள்டன் டென்னிஸ் தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டுப் போட்டியாளா்களுக்கு அமெரிக்க ஓபன் வாய்ப்பளித்துள்ளது.

பொ்லின் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

ஐசிசி டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் இஷான் கிஷண், 68 இடங்கள் ஏற்றம் கண்டு 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். பௌலா்கள் பிரிவில் புவனேஷ்வா் குமாா் 7 இடங்கள் முன்னேறி 11-ஆவது இடத்துக்கும், யுஜவேந்திர சஹல் 4 இடங்கள் முன்னேறி 26-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா்.

17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நவி மும்பையில் அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரையிறுதி ஆட்டங்கள் கோவாவில் அக்டோபா் 26-ஆம் தேதியும், காலிறுதி ஆட்டங்கள் நவி மும்பை மற்றும் கோவாவில் அக்டோபா் 21, 22 தேதிகளிலும் நடைபெறவுள்ளன. குரூப் சுற்று ஆட்டங்கள் அக்டோபா் 11 முதல் ஒடிஸா, கோவா, மகாராஷ்டிரத்தில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com