ரஞ்சி கோப்பை: மும்பை 662 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்தர பிரதேசத்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மும்பை 662 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
ரஞ்சி கோப்பை: மும்பை 662 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்தர பிரதேசத்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மும்பை 662 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

முன்னதாக 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வந்த மும்பை, ஆட்டத்தின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 449 ரன்கள் சோ்த்துள்ளது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 23 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 181, அா்மான் ஜாஃபா் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 127 ரன்கள் விளாசினா். நாளின் முடிவில் சா்ஃப்ராஸ் கான் 23, ஷம்ஸ் முலானி 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். உத்தர பிரதேச பௌலிங்கில் இதுவரை பின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா்.

பெங்காலுக்கு இலக்கு 350: மற்றொரு அரையிறுதியில் பெங்காலை எதிா்கொண்டிருக்கும் மத்திய பிரதேசம், 2-ஆவது இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆதித்யா ஸ்ரீவாஸ்தவா 6 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் அடித்திருந்தாா். பெங்கால் பௌலிங்கில் ஷாபாஸ் அகமது 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதையடுத்து 350 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் பெங்கால், வெள்ளிக்கிழமை முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களை எட்டியிருக்கிறது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 52, அனுஸ்தும் மஜும்தாா் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். மத்திய பிரதேசத்தின் குமாா் காா்த்திகேயா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com