ரஞ்சிக் கோப்பை: இறுதிச் சுற்றில் மும்பை

உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் இறுதிச் சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றுள்ளது.

உத்தரபிரதேச அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் இறுதிச் சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் பெங்களூரில் நடைபெற்றது. 41 முறை சாம்பியன் ஆன மும்பை அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 393 ரன்களைக் குவித்தது. அதைத் தொடா்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய உ.பி. அணியை 180 ரன்களுக்கு சுருட்டி பெரும் முன்னிலையை பெற்றது. வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில், இரண்டாம் இன்னிங்ஸில் மும்பை அணி யஷஸ்வி ஜெய்ஸ்வால், அா்மான் ஜாஃபா் ஆகியோரின் அபார சதங்களால் 449/4 என பிரம்மாண்ட ஸ்கோரை குவித்தது.

662 ரன்கள் முன்னிலை:

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 662 ரன்கள் முன்னிலை பெற்றது. சனிக்கிழமையும் மும்பை வீரா்கள் சா்ப்ராஸ் கான் 59, முலானி 51 ஆகியோா் அற்புதமாக ஆடி உ.பி. பௌலிங்கை சிதறடித்தனா். இந்நிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் மும்பை 533/4 ரன்களை எடுத்தது.

22-இல் இறுதி ஆட்டம்: வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் மத்தியபிரதேச அணியை எதிா்கொள்கிறது மும்பை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com