மழையால் பாதிக்கப்பட்ட பெங்களூரு டி20: ஆகாஷ் சோப்ரா புதிய யோசனை

மைதானங்களில் வீரர்கள், ரசிகர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்...
மழையால் பாதிக்கப்பட்ட பெங்களூரு டி20: ஆகாஷ் சோப்ரா புதிய யோசனை

கிரிக்கெட் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு மைதானங்களில் மழை தடுப்புக் கூரையை அமைக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது டி20 ஆட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.  டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருதை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வென்றுள்ளார். அவர் 6 விக்கெட்டுகள் எடுத்தார். 

இந்நிலையில் மழை காரணமாக கிரிக்கெட் ஆட்டங்கள் கைவிடப்படுவதைத் தடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

ஓரிரு மைதானங்களில் நகரக்கூடிய மழை தடுப்புக் கூரையை அமைக்க பிசிசிஐ முயற்சி எடுக்க வேண்டும். கிரிக்கெட் ஒளிபரப்பின் மூலமாகக் கிடைக்கும் தொகையைப் பார்க்கும்போது மழையால் ஆட்டங்கள் கைவிடப்படாமல் இருப்பதற்கான வழிமுறைகளை முடிந்தவரை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஐபில் தொலைக்காட்சி உரிமைக்கான வருமானம் மிகப்பெரிதாக உள்ளது. அதைப் பார்க்கும்போது மைதானங்களில் வீரர்கள், ரசிகர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். உலகின் மிகச்சிறந்த மைதானங்களை அமைக்கவேண்டும் என முன்னாள் வீரர் பீட்டர்சன் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com