புரோ லீக் ஹாக்கி: இந்திய மகளிர் தோல்வி

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியின் மகளிர் பிரிவில் ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை தோற்றது. 
புரோ லீக் ஹாக்கி: இந்திய மகளிர் தோல்வி

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியின் மகளிர் பிரிவில் ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை தோற்றது. 

இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக 23-ஆவது நிமிஷத்தில் சலிமா டெடெ கோலடிக்க, 38-ஆவது நிமிஷத்தில் ஆர்ஜென்டீனாவின் கோல் கணக்கை டெல்ஃபின் தோம் தொடக்கி வைத்தார். பின்னர் அந்த அணிக்கு 41 மற்றும் 43-ஆவது நிமிஷங்களில் கிடைத்த இரு பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் முறையே ஈவ்ஜெனியா டிரின்சினெடி, அகஸ்டினா கோர்ஸிலானி ஆகியோர் கோலடித்து ஆர்ஜென்டீனாவை 3-1 என முன்னிலை பெறச் செய்தனர். 

தொடர்ந்து 46-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கான 2-ஆவது கோலை தீப் கிரேஸ் ஏகா அடித்தார். என்றாலும், எஞ்சிய நேரத்தில் கூடுதல் கோல் வாய்ப்பு கிடைக்காததால் இறுதியில் ஆர்ஜென்டீனா வென்றது. இந்திய மகளிர் அணி அடுத்த ஆட்டத்தில் வரும் 21, 22-ஆம் தேதிகளில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. 

போட்டியில் ஏற்கெனவே புள்ளிகள் அடிப்படையில் ஆர்ஜென்டீனா முதலிடம் பிடித்து சாம்பியன் ஆகிவிட்டது. இந்தியா தற்போது 12 ஆட்டங்களில் 4 வெற்றிகளால் பெற்ற 24 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. 

ஆடவர் அணி தோல்வி: இதனிடையே, சனிக்கிழமை இரவு ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 1-4 என்ற கோல் கணக்கில் ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டது. முன்னதாக இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. 

அதில் இந்தியாவுக்காக தில்பிரீத் சிங் (22'), ஹர்மன்பிரீத் சிங் (59') ஆகியோர் கோலடித்தனர். ஷூட் அவுட்டில் விவேக் சாகர் பிரசாத் ஸ்கோர் செய்தார். புள்ளிகள் பட்டியலில் இந்திய ஆடவர் அணி 14 ஆட்டங்களில் 
8 வெற்றிகள் பெற்று 30 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com