கெமர் ரோச் டெஸ்டில் புதிய சாதனை

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் தனது அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் சாதனையை சமன்செய்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் தனது அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் சாதனையை சமன்செய்துள்ளார். 

வங்க தேசத்துக்கு எதிராக விலையாடிவரும் மே.இ. தீவுகள் அணியின் கெமர் ரோச் தனது இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் 219 விக்கெட்டுகளுடன் மே.இ. தீவுகள் அணியில் அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மைக்கேல் ஹோல்டிங் இவரை விட சிறந்த எக்கானமி வைத்துள்ளதால் 6வது இடத்தில் உள்ளார். ஆண்ட்ரீவ் வால்ஸ் 519 விக்கெட்டுகள் எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது. 

மே.இ. தீவுகள் அணி வங்க தேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்கள் கொண்டத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இதைக் குறித்து கெமர் ரோச் கூறியதாவது: 
இந்த சாதனையில் வரிசையில் எனது பெயர் வந்ததிற்கு மிகவும் பெருமையாக உள்ளது. தலைசிறந்த வீரர்களுக்கு மத்தியில் எனது பெயர் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com