உலகக் கோப்பை அணியில் டு பிளெஸ்சிஸ்?: முன்னாள் கேப்டன் கேள்வி

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டு பிளெஸ்சிஸுக்கு இடமளிப்பது குறித்து...
உலகக் கோப்பை அணியில் டு பிளெஸ்சிஸ்?: முன்னாள் கேப்டன் கேள்வி

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டு பிளெஸ்சிஸுக்கு இடமளிப்பது குறித்து தெ.ஆ. கிரிக்கெட் வாரியம் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

பிப்ரவரி 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள டு பிளெஸ்சிஸ், தென்னாப்பிரிக்க அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடைசியாக டிசம்பர் 2020-ல் சர்வதேச டி20யில் விளையாடினார். 

டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டு பிளெஸ்சிஸுக்கு இடமுண்டா என்கிற கேள்விக்கு தெ.ஆ. முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் கூறியதாவது:

சிறந்த 11 வீரர்களை தெ.ஆ. அணி தேர்வு செய்யவேண்டும். வீரர்கள் உலகம் முழுக்க சென்று டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். உலகக் கோப்பைக்கு முன்பு தென்னாப்பிரிக்க அணிக்காக டு பிளெஸ்சிஸ்ஸால் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும்? அவரை நேரடியாக உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப் போகிறார்களா? அல்லது போட்டிக்கு முன்பு அணிக்குத் தேர்வாகி அணியின் பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போகிறாரா? இந்தியாவுக்கு இந்தப் பிரச்னை இல்லை. ஆனால் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் குறித்து இதர நாடுகள் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. டு பிளெஸ்சிஸிடம் திறமை உள்ளது. அணியினருடன் அவர் எவ்வளவு நேரம் செலவிடவேண்டும் என்பதை நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். ஓய்வு பெற்றுவிட்டதால் ஒருவேளை டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதே டு பிளெஸ்சிஸுக்குப் போதுமானதாக இருக்கலாம் என்றார்.

37 வயது டு பிளெஸ்சிஸ், தென்னாப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்டுகள், 143 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com