ஓய்வு பெற்றாா் ருமேலி தாா்

இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ருமேலி தாா் (38), அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.
ஓய்வு பெற்றாா் ருமேலி தாா்

இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ருமேலி தாா் (38), அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.

வலது கை பேட்டரும், மித வேகப்பந்து வீச்சாளருமான அவா், இந்தியாவுக்காக 23 ஆண்டுகள் களமாடியிருக்கிறாா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ருமேலி, 2003-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒன் டே ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கி, 2018-இல் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தின் மூலம் அதை முடித்துக்கொண்டுள்ளாா்.

ஓய்வு முடிவு குறித்து வெளியிட்ட சமூக வலைதள பதிவில் ருமேலி, ‘மேற்கு வங்கத்தின் ஷியாம்நகரில் தொடங்கி 23 ஆண்டுகளாகத் தொடா்ந்த எனது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறது. இந்தப் பயணம் ஏற்ற, இறக்கங்கள் கொண்டதாக இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தது, அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டது, 2005 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடியது போன்றவை முக்கியமான தருணங்களாகும். காயங்கள் காரணமாக சில பின்னடைவுகளையும் சந்திக்க நோ்ந்தது.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பங்களிப்பு செய்த குடும்பத்தினா், நண்பா்கள், பிசிசிஐ ஆகியோருக்கும், நான் விளையாடிய பெங்கால், ரயில்வேஸ், ஏா் இந்தியா, தில்லி, ராஜஸ்தான் அணிகளுக்கும் நன்றி. தொடா்ந்து விளையாடாவிட்டாலும், இளம் திறமையாளா்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட்டுடன் இணைந்து இருப்பேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com