மகளிர் டி20: இலங்கை அணியைக் கட்டுப்படுத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்
By DIN | Published On : 25th June 2022 04:00 PM | Last Updated : 25th June 2022 04:00 PM | அ+அ அ- |

இந்திய அணி (கோப்புப் படம்)
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஜூன் 23 அன்று டி20 தொடங்கியது. அதன்பிறகு நடைபெறும் ஒருநாள் தொடர், ஜூலை 7 அன்று முடிவடைகிறது.
முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது டி20 ஆட்டம் டம்புல்லாவில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை விஷ்மி 45, கேப்டன் சமரி 43 ரன்கள் எடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்த இலங்கை அணியை இந்தியப் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினார்கள். இதனால் இலங்கை அணி பேட்டர்களில் விஷ்மி, சமரியைத் தவிர வேறு யாராலும் இரட்டை இலக்க ரன்களை எடுக்க முடியவில்லை. தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...